ஒரு தாயின் சாதனை
அளவான வீடுகளே உள்ள அந்தத்தெருவில் எல்லார் வீடுகளிலும் கலகலப்பும், ஆட்டம் பாட்டங்களும் மட்டுமே நிறைந்து வழியும். எப்பொழுதாவது, ஏதாவது பிரச்சனை தோன்றினால் அறிவுள்ள பெரியோர்கள் அதை உடனடியாகத் தீர்த்து வைத்து விடுவார்கள். அந்தத் தெருவில் எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு குடும்பம் சாமிநாதன் குடும்பம். குடும்பத்தலைவன் சாமிநாதன் ஒரு தமிழாசிரியர். அவரது மனைவி கமலா, பிள்ளைகள் கீதா, சுரேஷ். மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த அக்குடும்பம் திடீரென ஒருநாள் பெருந்துயரத்தை சந்திக்க நேர்ந்தது.
ஆம்! அக்குடும்பம், அக்குடும்பத்தின் தூணை, பாதுகாவலனை, பாசமான தந்தையை, அன்பான கணவனை, அனைவருக்கும் ஓடி உதவும் வள்ளலை, பாரபட்சமின்றி எல்லோரிடமும் நேசம் பாராட்டும் பண்பாளனை, எல்லோருக்கும் எல்லாமுமாய் இருந்தவனை, இருதய நோய் காரணமாகத் தாரை வார்த்தது. அப்பொழுது அவர்கள் வீட்டில் எழுந்த அழுகுரல் ஓலம் விண்ணையே பிளக்கச் செய்தது. அந்தத் தெருவே சோகத்தில் மூழ்கியது. சில நாள் கழிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
ஆனால், கமலா மட்டும் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பிரச்சனைகளை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தாள். சாமிநாதன் இருந்தவரையில், எல்லா பொறுப்புகளையும் அவரே பார்த்துக்கொண்டிருந்தாள். அதனால், கமலா வீட்டு வேலைகள் தவிர்த்து வேறெதுவும் அறியாதவளை, உலகம் தெரியாதவளாய் இருந்துவிட்டாள். திடீரென சாமிநாதன் இறந்தவுடன் அவளுக்கு உலகமே சூன்யமாகத் தோன்றியது. பயமும், கவலையும் அவளை வாட்டத் தொடங்கியது.
அவர் இறக்கும்போது பிள்ளைகள் கீதாவும், சுரேஷும், முறையே ஏழு, எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். அதனால், அவர்களிடம் தன் பயத்தை, கவலையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்னகை முகத்தோடு ஒவ்வொரு நாளையும் கழித்து வந்தாள். கணவன் இறந்தவுடன் பூவும், பொட்டும் வைக்கக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அவளும் அதையே செய்தாள். ஆனால், பிள்ளைகள் இருவரும் "அம்மா! நீ பொட்டு வைக்கலன்னா நல்லாவே இல்லம்மா, உன் முகத்தைப் பார்க்கிறதுக்கே பிடிக்கலைம்மா" என்றார்கள்.
அதிலிருந்து அவர்களுக்காக கருப்பு பொட்டு மட்டும் வைக்கத் தொடங்கினாள். தந்தை இருந்திருந்தாலும் இவ்வளவு செய்திருப்பாரா? என்பது சந்தேகம்தான் என்று அப்பிள்ளைகள் நினைக்குமளவிற்கு தந்தை ஸ்தானத்திலிருந்து எல்லாவற்றையும் செய்தாள் கமலா. கேட்டதையும் வாங்கிக் கொடுத்தாள், கேட்காததையும் வாங்கிக் கொடுத்தாள். மனதில் எத்தனை கவலைகளிருந்தாலும், தாயாக அவள் செய்யும் கடமையிலிருந்து ஒருநாளும் தவறியதில்லை.
சிலர் வீட்டில் தந்தையிருந்தும் இல்லததுபோல் இருக்கும். ஆனால், அவ்வீட்டில் தந்தை இல்லாதிருந்தும் இருப்பதுபோல் இருக்கிறது. அந்தளவிற்கு அவள் தாயாக இல்லாமல், தந்தையாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சிலர், கடனிருந்தும் அதனை அடைக்காமல் மற்றவர்களை வைத்திருக்கும் பொருள்களைப்போல் வாங்கி எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால், அவள் தனி மனுஷியாக நின்று கடனையெல்லாம் அடைத்துத் தனித்துவமாகத் திகழ்கிறாள்.
சாமிநாதன் இறந்து இன்றோடு பதினொரு வருடமாகிறது. இத்தனை வருடங்களில் அவள் எத்தனையோ முறை பல இடர்ப்பாடுகளைச் சந்தித்துள்ளாள். வீட்டுத்தலைவன் இல்லையென்றால், ஒரு குடும்பம் என்னென்ன விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்பதற்குக் கமலாவே மிகச்சிறந்த உதாரணம்.
பிள்ளைகளைப் படிக்க வைப்பதிலிருந்து, துணிமணிகள், வீட்டுத் தேவைகளை மளிகை சாமான், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், குழாய் வரி, அஞ்சல், வங்கி கணக்குகள் சரிபார்த்தல் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
உறவுகள் யாரும் என்ன? ஏதென்று கூட கேட்காமல் இருந்தனர். பணத்தால் உதவி செய்யவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், "நாங்களெல்லாம் இருக்கிறோம், நீ எதற்கும் கவலைப்படாதே" என்ற நம்பிக்கையை இந்த பன்னிரண்டு வருடத்தில் வாய்வார்த்தையாகக்கூடக் கூறியதில்லை.
கமலாவின் மகள் கீதா எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்ந்ததாலேயே உறவுகளைப்பற்றி அவளுக்கு சரியாகப் புரியவில்லை. சுரேஷ் எப்பொழுதும் பொறுப்பான பையனாக இருக்கிறான். இன்று, கீதாவும் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு விட்டாள். உறவுகளைப்பற்றித் தெரிந்தவுடன், கீதா "அவர்கள் யாரும் நமக்குத் தேவையில்லை, அவர்கள் உறவே வேணாம், தூக்கிஎரியுங்கள்" என்றாள்.
அதற்குக் கமலா, "நம்மக்கிட்ட பணம் இருந்தாலும், கல்யாணம் கட்சின்னு ஏதாவது வந்தா அவங்க எல்லாரும் முன்னயிருந்துதான் எல்லாம் செய்யணும். அதுவுமில்லாம அப்படி யாரையும் வேணாம்னு சுலபமா ஒதுக்கிட முடியாது" என்றாள்.
"நான் இல்லைனாலும் .......................... அப்படினு சொல்லி முடிக்கறதுக்குள்ள கீதா கமலாவின் வாயைத் தன் கையால் பொத்தினாள். அம்மா! அப்படி சொல்லாதன்னு சொல்லிட்டு அழுதாள். அவள் கையை எடுத்துவிட்டு, "சில உண்மையை ஏத்துக்கிட்டுதான் ஆகணும், எல்லாத்தையும் பொறுத்துக்கோ!" என்றாள். அதை ஏற்றுக்கொண்டவளாய் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தலையசைத்தாள் கீதா.
கீதா இன்று ஒரு முதுநிலைப் பட்டதாரி. சுரேஷ் பொறியியல் முடித்துவிட்டு ஒரு "மென்பொருள்" துறையில் கைநிறைய சம்பளத்தோடு வேலை செய்து கொண்டிருக்கிறான். இளம் வயதிலேயே கணவனை இழந்தும் தன் இளம் உணர்ச்சிகளைப் புதைத்துக்கொண்டு தூய்மையான உள்ளத்தோடும், உடம்போடும் அப்பிள்ளைகளுக்காக மட்டுமே இருக்கிறாள் கமலா.
இன்று மார்ச் மூன்று - அன்னையர் தினம். பிள்ளைகள் இருவரும் அம்மாவிற்குப் பரிசளித்தார்கள் விலையுயர்ந்த ஒரு கவிதையை .......
"தாயே!
எங்களைப் பெற
நீ
தவம் செய்தாய் ....!
உன்னைப் பெற
நாங்கள் என்ன
தவம் செய்தோம்...?"
ஆயிரமாயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய இக்கவிதையைப் பார்த்தவுடன் மேனி சிலிர்த்து, கண்ணீர் பெருகி, பிள்ளைகளை உச்சி முகர்ந்து அணைத்துக்கொண்டாள் கமலா. இந்தக் கமலா வெறும் கதையில் வந்து போனவள் இல்லை. நாம் வாழும் சமூகத்தில் எத்தனையோ கமலாக்கள் தாயாய், தந்தையாய், தோழியாய் இன்னும் பல அவதாரங்கள் எடுத்துத் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் வாழ்ந்துகொண்டும், சாதித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.
சாதனை என்பது செய்தித்தாளிலும், தொலைக்காட்சியிலும். கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றால்தானா? இல்லவே இல்லை. கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை வெல்வது மட்டுமல்ல சாதனை. கண்ணுக்குத் தெரியாத ஆயிரமாயிரம் எதிரிகளை வெல்வதும் மிகப்பெரிய சாதனைதான்.