* என்
மனக்கதவு
எப்பொழுதுமே திறக்கப்பட்டிருந்தாலும்
அதில் நுழைவதற்கு
உனக்கு மட்டுமே
அனுமதி ...!
* இதயம்
இடம் மாறியது
என் இதயம்
அவனிடம்
அவன் இதயம்
அவளிடம் !
* நீ
என்னருகில் இருந்தபோது
தோன்றாத யாவும்
எவளோ ஒருத்தியின்
அருகில் இருந்தபோது
தோன்றியது ...!
* அவன்
எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்
வாரத்தின்
கடைசி நாளுக்காக
விவாகரத்தான
மனைவியைக் காண்பதற்கல்ல
விவாகத்தில் உண்டான
மகளைக் காண்பதற்கு ...
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
//இதயம்
இடம் மாறியது
என் இதயம்
அவனிடம்
அவன் இதயம்
அவளிடம் !//
குட்டி கவிதையில் உள்ள சின்ன டிவிஸ்ட் நல்லா இருந்துச்சு!:)
//அவன்
எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்
வாரத்தின்
கடைசி நாளுக்காக
விவாகரத்தான
மனைவியைக் காண்பதற்கல்ல
விவாகத்தில் உண்டான
மகளைக் காண்பதற்கு//
சூப்பர் பிரியா!!!!!!
நன்றி தமிழ்.
// என்
மனக்கதவு
எப்பொழுதுமே திறக்கப்பட்டிருந்தாலும்
அதில் நுழைவதற்கு
உனக்கு மட்டுமே
அனுமதி ...!
//
அழகு...
Post a Comment